
ஈகை
குறள் மொழி 63
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
குறள் எண்: 228
குறள் மொழியின் பொருள் :
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதை இழந்து விடுகின்ற கொடியவர். வறியவர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதால் உண்டாகும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
நபிமொழி
"கொடுத்து மகிழுங்கள்: தான தர்மம் செய்யுங்கள். தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்." என்று நபி பெருமான் (ஸல்) அவர்கள் கூறினார்.
ஆதாரம் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி). நூல் : புகாரி) 6022
வினை செயல் வகை
குறள் மொழி 64
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
குறள் எண்: 679
குறள் மொழியின் பொருள்:
நண்பர்களுக்கு உதவிகள் செய்வதைவிட விரைந்து செய்ய வேண்டியது என்னவெனில் தீய எண்ணம் கொண்ட பகைவரை நண்பராக்கிக் கொள்வதாகும்.
நபிமொழி:
நபியே! "நன்மையும், தீமையும் சமமாகாது. மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு நீங்கள் தீமையைத் தடுப்பீராக! அப்போது தான் உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர் கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர்!. விரைந்து செய்யும் செயல் ஆகும். அதுவே,சான்று
இறைவசனம். திருக் குர்ஆன் - 41:34 வசனம்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments