
நம்மில் பலருக்கு வாழ்க்கையில் என்னென்னவோ சாதிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், அடையும் முன்பே பாதியில் அந்த முயற்சியை கூட கைவிட்டு விடுவோம். நீங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு தேவையாக இருக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் குறித்து இங்கு. பார்க்கலாம்.
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் நிறை - குறை என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அப்படி இல்லை என்றால் நாம் மனிதர்களே கிடையாது. இதற்கு ஆங்கிலத்தில் Flaws என்று பெயர். இது நம் வாழ்க்கையில் இருக்கும் மேடு பள்ளத்தில் நாம் எப்படி பயணிக்கிறோம் என்பதற்கு இணங்க மாறுபடும். இதை ஒருவர் அறிந்து கொண்டாலே அவர் வெற்றிக்கான வழி சென்று கொண்டிருக்கிறார் என அர்த்தம்.
முயற்சி திருவினையாக்கும்:
ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால், அவரிடம் இருக்க வேண்டிய திறன்கள் மிகவும் குறைவானதாக இருப்பினும் மனதில் விடாமுயற்சியும், கடின உழைப்பும், இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியும் இருக்க வேண்டும். இத்துடன் சேர்ந்து தன்னை சுற்றி இருக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிக்கும் தன்மை ஒருவருக்கு அமைந்துவிட்டது என்றாலே அவருக்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும்.
வாழ்வில் என்ன அடிபட்டாலும், எவ்வளவு கீழே விழுந்தாலும் நான் நினைக்கும் வரை, நான் தோற்க மாட்டேன் என்கிற எண்ணம் இருந்தாலே ஒருவர் கண்டிப்பாக வெற்றி அடைய முடியும். அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உள்ளுக்குள் ஓரமாக இருக்கும் ஒரு உணர்ச்சியாகவும், எப்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு எண்ணமாகவும் இருக்கலாம். இப்படி மறைமுகமாக நம் மனதுக்குள் இருக்கும் இந்த நம்பிக்கை நாளடைவில் ஊக்கம் கொடுக்கும் பெரும் தன்னம்பிக்கையாக மாறும்.
நிறை குறைகள் குறித்த லிஸ்ட்..
உங்களிடம் பிளஸ் இது மைனஸ் எது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி தெரிந்தால் தான், இதெல்லாம் உங்களுக்கு பலம், எதெல்லாம் உங்களுக்கு பலவீனம் என்பதும் தெரியவரும். இதில் தான் உங்களது புத்திசாலித்தனம் அடங்கி இருக்கிறது. உங்களிடம் என்ன குறையோ அதை கலைந்து, இன்னும் உங்களை நீங்கள் மெருகேற்றிக் கொள்ள இது உதவும். இதற்காக உங்களைப் பற்றிய விமர்சனம் கேட்க நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது புரிந்து கொள்ளக்கூடிய குடும்பத்தினரையும் அணுகலாம்.
முயற்சி + பயிற்சி:
உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள முயற்சியும், வெற்றிக்கான பயிற்சியையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக உங்களை நீங்கள் வெற்றியாளராக மாற்றிக்கொள்ள முடியும்.
சுருக்கமாகச் சொன்னால்...
தன்னம்பிக்கையும், நேர்மறை சிந்தனையும் ஒரு மனிதனிடம் இருந்துவிட்டால், அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இலக்கையும் மிக எளிதாக அடைந்துவிட முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். சோர்ந்து போகாமல் இன்றிலிருந்தே உங்கள் மீதான நம்பிக்கையை விதைக்கத் தொடங்குங்கள்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments