
அமெரிக்கா, பால்ட்டிமோர் (Baltimore) பாலத்தின் மீது கப்பல் மோதிய சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனத்தின் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்திருக்கிறது.
2024 மார்ச் மாதம் பால்ட்டிமோர் துறைமுகத்தில் இருக்கும் பிரான்சிஸ் ஸ்காட் கீ (Francis Scott key) பாலத்தின் மீது டாலி (Dali) கப்பல் மோதியது. அந்தச் சம்பவத்தில் 6 பேர் மாண்டனர்.
சிங்கப்பூரின் Synergy Marine நிறுவனம், சென்னையின் Synergy Maritime நிறுவனம் ஆகியவற்றின் மீதும், டாலி கப்பலின் அதிகாரி ராதாகிருஷ்ணன் கார்த்திக் நாயர் மீதும் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
டாலி கப்பல், துறைமுகத்தில் இருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்ட நான்கு நிமிடத்தில் இரண்டுமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதனால் அது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியதாக நம்பப்படுகிறது.
மேரிலந்து (Maryland) மாநிலம், பாலத்தை மாற்றுவதற்குச் சுமார் 4.3 பில்லியன் டாலர் முதல் 5.2 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்று மதிப்பிடுகிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments