Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-26


சூது

குறள் மொழி 67

கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.

குறள் எண் :935

குறள் மொழியின் பொருள் :

போதை, சூதாட்டக்கருவிகள், சூதாடுமிடம், சூதாட்டத் திறமை ஆகியவற்றைக் கைவிடாதவர்கள் எல்லாவிதமான செல்வம் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒருநாள் இழப்பர். ஆதலின் மக்கள் இவற்றைத் தவிர்த்தல் நன்மை தரும்.

நபிமொழி

இறைநம்பிக்கை கொண்டோரே! மதுவும், சூதாட்டமும், கற் சிலைகளை வழிபடுதலும் குறி கேட்பதும் சாத்தானின் அருவருக்கத் தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
இறை வசனம் - (திருக் குர்ஆன்-5:90)

அருளுடைமை

குறள் மொழி 68

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

குறள் எண் : 247

குறள் மொழியின் பொருள் :

பொருள் இல்லாதவர்களுக்கு இந்த பூமியில் இன்பம் இல்லை. அதுபோல உயிர்களிடத்தில் கருணை காட்டாமல், அருள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு மேல் உலகில் இன்பம் இல்லாது போகும்.

நபிமொழி:

"கருணை புரிபவர்கள் மீது, கிருபையுள்ள இறைவன் கருணையைப் பொழிகின்றான். எனவே, நீங்கள் பூமியில் இருப்பவர் மீது கருணை காட்டுங்கள்; ஈடாக வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கருணை பொழிவான்" இதன் மூலம் மனித இனத்தில் ஒவ்வொரு பொது மனிதனிடமும் கருணைபுரிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

நபிகள் பெருமானார் (ஸல்)
ஆதாரம் : நூல் : திர்மிதி - 
நபிகளாரின் சமூக உறவு பக். 84.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments