
வர்ணிக்க வார்த்தையிலை.
வஞ்சி இவளின் அழகை.
வந்து வந்து மோதும் கவிதை.
வரியமைத்திட இல்லை திறமை.
மலரோடு ஒப்பிட்டுக் கூறவா?
மரிக்கொழுந்தின் மகளே
மனதுக்குள்ளே புகழ்ந்து பேசவா?
மனசெல்லாம் மத்தாப்படி மயிலே.
அருந்ததி பார்த்தேன் நீயில்லையடி.
அம்புலி பார்த்தேன் உன் போலில்லையடி.
அத்தனை வடிவம் உன்னில் உள்ளதடி.
அழகின் முழுமதி நீயே நீயடி.
ஆசையோடு நானும் அழைகிறேன்.
ஆதரவு தேடி வருகிறேன்.
ஆத்தாடி வருவாயோ நீயும்
ஆணழகனோடு ஆயுள் முழுவதும் தேவி.
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments