Ticker

6/recent/ticker-posts

கண் முன்னே நீ இருக்க!


ஆசையோடு கேட்கின்றாயே
சாப்பிட்டாயோ  அன்பே என
கண்முன்னே நீ இருக்க
கைவிடுகின்றதே பசியுமடி.

உன் புன்னகையே என் உணவடி
உன் சொற்களே அறுசுவையடி
உன் அருகில் அமர நினைத்தாலே
கைவிடுகின்றது தாங்கிடும் குச்சியடி.

உன் கைகளைப் பார்க்கும் போதுதான்  
குடைச்சலாகவே ஓடி வரும் பசியடி
சாம்பார் இரு கண்ணிலும் நிக்குதடி 
ஓர் இடம் ஒதுக்கி வையடி  எனக்காக. 

தட்டிலே ஒட்டிய படியே அன்னமே
உன் ரேகையடி வட்ட வடிவான 
முகம் கொண்ட அகத்தழகியே 
நீ மோர் சாதம் உருட்டித் தந்தால்
மோட்சமான நாளாய் மாறிடுமே 
எனக்கும் உனக்கும் நாளைய நாளடி.

என் பசி தீர்க்கும் உன் சிரிப்புக்கு
நீடிக்க வேணும் ஆயுள் ரேகையடி 
நாடித் துடிப்பிலே ஓடும் நினைவுகள்
எந்நாளும் இவைகள் மாத்திரம் தானடி.


ஆர்.எஸ் .கலா


 


Post a Comment

0 Comments