
Stent பற்றாக்குறை காரணமாக நோயாளர்களின் உயிருக்கு ஆபத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாச தெரிவித்த கருத்து தொடர்பில் காலி தேசிய வைத்தியசாலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய காலி தேசிய வைத்தியசாலைக்குள் இருதய நோயாளர்களுக்கென என்ஜியோகிரேம் பரிசோதனை மற்றும் Stent பரிசோதனை வழமை போன்று இடம்பெறுகிறது.
இதற்கு தேவையான வைத்தியசாலை வசமுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனைய வைத்திய உபகரணங்களிலும் எவ்வித பிரச்சினையும் இல்லையென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் வைத்தியசாலையின் மருத்துவ வசதிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
itnnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments