
அன்னையர் தினத்துக்காக ஊழியர்களுக்குச் சிறப்பு விடுமுறை கொடுத்து அசத்தியிருக்கிறது டில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.
அதுவும் சம்பளத்துடன் கூடிய 3 நாள் விடுப்பு.
அதோடு முடியவில்லை....10,000 ரூபாய் பணமும் (சுமார் 130 வெள்ளி) கொடுத்திருக்கிறது.
அந்தத் தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமது Instagram செயலியில் பதிவிட்டுள்ளார்.
இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Grover எனும் அந்த நிறுவனம் ஊழியர்கள் தங்களது பெற்றோருடன் சிறந்த நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் சலுகைகளை அறிவித்தது.
"நேரம், நாள்கள், கனவுகள் என அனைத்தையும் பெற்றோர் நமக்காகத் தியாகம் செய்கின்றனர்; ஆனால் அதனை அவர்கள் திரும்பக் கேட்பதில்லை" என்றது நிறுவனம்.
இதனைக் கருத்தில்கொண்டு பெற்றோரைக் கௌரவிக்க நிறுவனம் இந்தச் சலுகையைக் கொடுத்துள்ளது.
நிறுவனத்தின் இந்த முயற்சியைப் பாராட்டிய பலர், முழு உலகமே இதே போன்று சிந்திக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? என்று நெகிழ்ந்துவருகின்றனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments