Ticker

6/recent/ticker-posts

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து... விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை..!


விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகையுடன் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான மால்டாவில் உள்ள நக்ஸர் நகரில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புடன் கரும் புகை பட்டாசு ஆலையில் இருந்து வெளியேறியது.

விபத்தின் போது பட்டாசு ஆலையில் இருவர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், அதுகுறித்து அந்நாட்டு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

news18


 


Post a Comment

0 Comments