Ticker

6/recent/ticker-posts

உக்ரைனில் விடிய விடிய ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா... பலர் படுகாயம்!


உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா விடிய விடிய நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள மாணவர் விடுதி மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. குடியிருப்புகள், வணிக வளாகம், சேமிப்புக் கிடங்குகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, ஷெவ்சென்கோ நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்பது மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கோரத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 21 பேர் படுகாயமடைந்தனர். அதில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18

 


Post a Comment

0 Comments