Ticker

6/recent/ticker-posts

கப்பலில் பரவிய ஷாக் வைரஸ்... பயணிகளை காக்க பறந்த விமானம்... சுவிட்சர்லாந்தில் என்ன நடக்கிறது?


அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் சென்ற போது, அதில் இருந்தவர்களுக்கு ஹண்டா வைரஸ் தொற்று பரவியது தெரியவந்தது.

ஹண்டா வைரஸால் பாதிக்கப்பட்டு அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித்தவித்த பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம், ஸ்பெயினின் கிரான் கனேரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு, எம்பி ஹோண்டியஸ் என்ற சொகுசு கப்பலில் 147 பயணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் சென்ற போது, அதில் இருந்தவர்களுக்கு ஹண்டா வைரஸ் தொற்று பரவியது தெரியவந்தது. கப்பலில் இருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், நடுக்கடலிலேயே கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கப்பலில் இருந்த பயணிகளில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் மருத்துவ விமானம் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஸ்பெயினின் மலாகாவில் விமானத்தை தரையிறக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஸ்பெயினின் கிரான் கனேரியா விமானநிலையத்தில் மருத்துவ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கப்பலில் இருந்த ஸ்பெயின் நாட்டினர் ராணுவ மருத்துவமனையில் 45 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போன்று, மற்றொரு மருத்துவ விமானம் நெதர்லாந்தில் தரையிறக்கப்பட்டது.

news18


 


Post a Comment

0 Comments