
லண்டனில் உள்ள துணிக்கடை ஒன்றில் திருட முயன்ற இளையர்களின் திட்டம் பலிக்கவில்லை.
இள்ஃபோர்ட் (Ilford) பகுதியில் அமைந்துள்ள அக்கடையில் கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5 மணிக்குச் சம்பவம் நிகழ்ந்தது.
முகமூடி அணிந்திருந்த ஒன்பது இளையர்கள் கடையிலிருந்த ஆடைகளை அள்ளிக்கொண்டு கும்பலாகத் தப்பிக்கப் பார்த்தனர்.
ஆனால், அங்கே வேலை செய்த இளம் பெண்கள் மின்படிகளை நோக்கி ஓடிய திருடர்களைப் பிடிக்க விரைந்தனர்.
அவர்கள் கைகளில் இருந்த துணிகளை முடிந்த அளவு பறித்தனர்.
சம்பவத்தின் காணொலி இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
காணொலியில் இளையர்கள் அலமாரிகளில் இருந்த ஆடைகளை அள்ளியவாறு மின்படிகள் உள்ள திசையில் வேகவேகமாக நடப்பதைப் பார்க்கமுடிந்தது.
கடையில் இருந்த பெண் ஊழியர்கள் அவர்களைத் தடுக்க விரைந்தனர்.
இருதரப்பும் மின்படிகளில் மல்லுக்கட்டினர்.
கடை ஊழியர்கள் பெரும்பாலான துணிகளை மீட்டனர். ஆனால் இளையர்கள் லாவகமாகச் சிக்காமல் சிதறி ஓடிவிட்டனர்.
காவல்துறை இளையர்களைத் தேடி வருகிறது.
காணொலியைக் கண்ட இணையவாசிகள் திருடர்களைப் பிடிக்க முயன்ற வீராங்கனைகளைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments