சாயங்கால வேளையிலேசாலையோரப் பூங்காவில்
சாய்ந்தாடுகிறாயே மெதுவாக
வண்ணமயிலாய் சாந்துப்
பொட்டு பெண்மயிலே
சாரை பாம்பு வளைவாகவே
சாமந்திக் காற்று தோளோரமா
சாரலில் ஆடும் சாதி மல்லிப்
பூச்சரமா நீயே நெஞ்சோட நிக்கறாய்
மந்தாரப் பூவே மடிசாயவே வேணுமடி
மயங்கியே போனேனடி
மனசுக்குள்ள மாமனானே
மல்லிகைச் சிரிப்பாலே
மணக்கிறாயே நெஞ்சுக்குள்ளே
அன்பான வாழ்க்கையிலே
அலையாகிடுவோம் வாருமடி
கண்ணாடி குளம் அலைமோதும்
கண்ணோட்டம் உன் கண் போலா
காய்ந்த இலைகள் கூட நின்று
காதல் கதை கேட்கும் போலே
மரக்கதச் சூடா உனதழகே
மரக்கத்தான் முடிந்திடுமோ
அள்ளி அணைத்திட வரவோ
அல்லி மலரே சொல்லடி ரகசியமே
கையில் கூந்தல் காற்றோடடி
காலில் குங்குமப் புள்ளோடடி
காதல் குருவி உள்ளேறுது
காத்திருக்கும் இதயம் கதவோடடி
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments