Ticker

6/recent/ticker-posts

திடிர் பிரியாணி


இவை செய்யத் 
தேவையானவை.

100 கிராம் சோயாமிட்
இதனை ஊற விட்டு
நன்றாகக் கழுவி நீரை பிழிந்து 
எடுக்கவும்.

100 கிராம்  மைசூர்  பருப்பு
(அதாவது ஓரஞ்சி வண்ணப் பருப்பு)
அதனோடு 200 கிராம்
 சாதாரணமான அரிசி
இரண்டையும் ஒன்றாக கழுவி எடுக்கவும்.

1 பெரிய தக்காளி  8 
துண்டாக நறுக்கி எடுக்கவும் 
5-6 பச்சை ஊசி மிளகாய்
கிறி விட்டு எடுக்கவும் 
2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி எடுக்கவும்.
1 கைப்பிடி  புதிய கறிவேப்பிலை
சமையலுக்கு நெய் தான் தேவை என்று இல்லை நீங்கள் விரும்பிய எண்ணெய் பாவிக்கலாம்.
 (நான் உருக்கி எடுத்த தேங்காய் எண்ணெய் பாவித்தேன். )
செய் முறை

வெங்காயம்  சோயா மிட் இவை இரண்டையும்  சமையல் செய்யும் பாத்திரத்திலே எண்ணெய் விட்டு பொன் நிறத்தில் பொரித்து எடுக்கவும் அதே பாத்திரத்தில் நீர் ஊற்றி தேவைக்கு ஏற்ப உப்பு போட்டு 
நீர் கொதித்ததும்.

கழுவி வைத்து உள்ள பருப்பு அரிசி இரண்டையும் சேர்த்துக் கொதிக்க விடவும்  .பாதி வெந்து வரும் போது கறிவேப்பிலை  பொரித்த வெங்காயம் சோயாமிட் இவைகளைப் போட்டு கிளறி விடவும் அப்போதே சிக்கன் சோஸ்க் கட்டி இருந்தால் சிறு துண்டு சேர்க்கலாம் சைவமாக செய்வோர் தவிக்கவும்.

நீர் வற்றி வரும் போது மீண்டும் கிளறி விட்டு மேலே தக்காளி  ஊசி மிளகாய் இவைகளைப் போட்டு மூடி விட்டு அடுப்பை நன்றாகக் குறைத்து 30 நிமிடம்  விடவும் பின்னர் திறந்து ஒரு தடவை கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி சூடாகவே பறி மாறவும்.

இவை தனியாகவும் உண்ணலாம் 
குழந்தைகளுக்கு தயிரோடு கொடுக்கலாம்  எந்த வகையான கறியோடும் இணைத்து உண்ணலாம்  எப்படி சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும்

ஆர்.எஸ் .கலா


 


Post a Comment

0 Comments