Ticker

6/recent/ticker-posts

கடமை உணர்வுள்ள ஆண்!


தோள்களில் தாங்கிடும்
காலங்கள் காயங்கள்
சிரிப்பில் சிப்பி தான்
உள்ளே ஒரு கடல்
காலடியில் கல்லும்
மெதுவாக உருகிடும்
மௌனத்தின் மொழிகளின்
நெஞ்சம் தான் அவன்.

அவன் தான் ஆண்
ஆனால் கண்ணீர் உண்டு
மூச்சுக் குறையும் போதும்
மலராத கனவுகளைத் தாங்கி
பிள்ளை மனசு அறிந்து
அழுகையும் அன்பையும்
அடக்கிட  நிற்கும் தூண்.

அவனது கைகளைப் பாரு
வேலையும் வேதனையும்
ஒன்றாக இணைந்து 
வரையப் பட்ட வரைப் 
படமாக கை ரேகை தேய்ந்தும்
வளர்ந்தும் தென்பட்டிடும்.

கண்ணைப் பாரு 
சோர்வு தெரிந்திடும் 
சிரிப்பைக் கொண்டு அதை 
மறைத்து மகிழ்ந்திடுவான் 
இல்லறத்தை நல்லறமாக்கிட
உழைப்பால் உயந்திடுவான் 
அவனே 
அவந்தான் திறமையான ஆண்.


ஆர் .எஸ் . கலா


 


Post a Comment

0 Comments