
பெய்ஜிங்கில் மே 14-15, 2026ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு, அமெரிக்காவுக்கு குறைந்தளவு வெற்றியைத் தந்துள்ளது என்றுதான் மதிப்பிட வேண்டும்!
இந்த சந்திப்பின்போது பெரிய திருப்புமுனைகள் இல்லாவிட்டாலும் கூட, உறவுகள் நிலைப்படுத்தப் பட்டுள்ளது எனலாம்.
சில வர்த்தக ஒப்பந்தங்கள், உறுதிமொழிகள் மற்றும் ஈரான் விவகாரத்தில் சீனாவின் வாய்மொழி ஆதரவு என்பன அமெரிக்காவின் பக்கம் சிறிய நன்மைகளாகக் கருதப்படுகின்றன.
சுமார் 200 Boeing விமானங்கள், சோயாபீன், எண்ணெய் போன்ற அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு சீனா உறுதியளித்ததால், டிரம்ப் இந்த ஓர் "அற்புதமான வர்த்தக ஒப்பந்தம்"(Fantastic trade deals) என்று புகழ்ந்தார்!
ஆனால் பல விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை; முழுமையான ஒப்பந்தங்கள் குறைவு என்றுதான் குறிப்பிட வேண்டும்!
இந்த சந்திப்பை டாரம்ப் "very successful" என்று அழைத்தார்; ஷி ஜின்பிங் "historic" என்றார். அந்த வகையில், இந்த சந்திப்பு உறவுகளை மோசமாக்காமல் நிலைப்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு நல்லது!
இந்த சந்திப்பற்குப் பிறகு, சீனா ஈரானை கைவிட்டு விடும் என சமூக ஊடகங்களில் சிலர் எழுதி வருகின்றனர்.
இப்போது, சீனா ஏன் தனது நீண்டகால நட்பு நாடான ஈரானைக் கைவிட்டது என்பது உலக அரங்கின் சுவாரஸ்யமான விவாதமாக உள்ளது. ஆனாலும், ஈரானை சீனா முழுமையாகக் கைவிட்டுவிடாது என்று மட்டும் ஆணித்தரமாகக் குறிப்பிடலாம்.
எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய இடமான Strait of Hormuz ஐ திறப்பதற்கு சீனா உதவ முன்வந்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பும் ஈரான் அணு ஆயுதம் வைக்கக் கூடாது; ஹார்மூஸ் திறக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன.
அதனால், இந்த சந்திப்பை ஓர் இராஜதந்திர நிலைப்படுத்தல் என்று குறிப்பிடலாமே தவிர, இது ஒரு விளையாட்டு மாற்றல் அல்ல; சூழல் விரைவில் மாறலாம்!
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments