
குறள் 177:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.
மாற்றார் பொருளைக் கவர்ந்து வளம்பெற்றால் அப்பயன் தீமை தரும்.
குறள் 178:
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
தன்செல்வம் குன்றா திருக்கப் பிறர்பொருளை என்றும் கவராமல் வாழ்.
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு.
பிறர்பொருள்மேல் ஆசையற்ற பண்பே அறமாம்! அவர்நாடி செல்வம் வரும்.
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு.
பிறர்பொருள் ஆசை அழிவதான்!! ஆசை புறக்கணித்துச் சேர்த்தால் வளம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments