Ticker

6/recent/ticker-posts

CCTV போக்குவரத்து அபராதம் என்ற பெயரில் பரவும் போலி SMS; பொதுமக்கள் அவதானம்!


சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, பொலிஸார் போன்ற முறையில் போலியான SMS மற்றும் WhatsApp செய்திகளை அனுப்பி, சாரதிகளிடமிருந்து பணம் மற்றும் தனிப்பட்ட தரவுகளை திருடும் சைபர் மோசடி குறித்து இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவு (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த போலி செய்திகள் இலங்கை பொலிஸாரினால் அனுப்பப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் போன்றே வடிவமைக்கப்பட்டு, போலி தொலைபேசி எண்கள் மற்றும் இணைய இணைப்புகள் (Links) ஊடாக பொதுமக்களுக்கு அனுப்பப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அவ்விடயத்தில் வரும் இணைப்புகளை சொடுக்கும் போது (Click), அவை பயனர்களை போலி இணையதளங்களுக்குள் அழைத்துச் சென்று, அபராதப் பணத்தை செலுத்துமாறு கோருகின்றன. இந்த போலி இணையதளங்கள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வரவுசெலவு கட்டண முறைமையான ‘GovPay’ தளத்தை ஒத்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை CERT நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான இணையதளங்களுக்குள் நுழைவதன் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விபரங்கள், OTP குறியீடுகள், தேசிய அடையாள அட்டை விபரங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகள் மோசடிக்காரர்களின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனவே, SMS அல்லது WhatsApp மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை சொடுக்குவதைத் தவிர்க்குமாறும், அபராதப் பணம் செலுத்துவதற்கு முன்னர் அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் உத்தியோகபூர்வ அபராதப் பத்திரம் (Fine sheet) வழங்கப்பட்ட பின்னரே, GovPay கட்டண முறைமையின் ஊடாக அபராதப் பணம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இலங்கை CERT நிறுவனம் நினைவூட்டியுள்ளது.

itnnews


 


Post a Comment

0 Comments