
உலகின் ஆகவேக ஓட்டப்பந்தய வீரர் எனப் பெயர்பெற்ற உசெய்ன் போல்ட்டின் (Usain Bolt) உலகச் சாதனையை முறியடிப்பவருக்கு 10 மில்லிடன் டாலர் பரிசுத் தொகை காத்திருக்கிறது.
Enhanced Games விளையாட்டின் ஏற்பாட்டாளர்கள் அதைத் தெரிவித்தனர்.
2009ஆம் ஆண்டு ஜமைக்காவைச் சேர்ந்த போல்ட் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 9.58 விநாடிகளில் முடித்து உலகச் சாதனை படைத்தார்.
அது யாராலும் எட்டமுடியாத இலக்காகக் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள Enhanced Games விளையாட்டின்போது அந்தச் சாதனையை முறியடிப்பவருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
Enhanced Games முதல்முறையாக அமெரிக்காவில் நேற்று (27 மே) தொடங்கியது.
தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தும் விளையாட்டாளர்கள் அதில் கலந்துகொள்ளலாம்.
அதனால் அதில் விளையாட்டாளர்கள் புரியும் சாதனைகள் அதிகாரத்துவச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற மாட்டா.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments