Ticker

6/recent/ticker-posts

கோழி மிளகு வறுவல்


அரைக்கிலோ நாட்டுக்கோழி
(நாட்டுக் கோழி மாத்திரமே )
2-மேசைக்கரண்டி மிளகு
1-தேக்கரண்டி சிறு சீரகம் 
1- தேக் கரண்டி பெ.சீரகம்.
2- மேசைக்கரண்டி பட்மிளகாய் விதை.
1கைப் பிடி காய்ந்த கறிவேப்பிலை.
1 துண்டு மஞ்சல் கட்டி.
இவைகளை வறுத்துப் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். 

கோழியைத் துண்டு போட்டு 
சுத்தம் செய்து நன்றாகக் கழுவி நீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.

நீர் வற்றியதும் அரைத்த பொடியோடு 
4 மேசைக் கரண்டி அளவு எலுமிச்சம் சார் விட்டு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக ஒன்று சேர்க்கவும் அனைத்துப் பொடியும் கோழியில் ஒட்டிப் பிடிக்க வேணும். ஒரு மணி நேரம் ஊற விடவும்.

தாளிக்கத் தேவையானவை

இஞ்சி பூண்டு விழுது
தேவைக்கு ஏற்ப 
சிறிய வெங்காயம்  
1 -கைப்பிடி  .புதிய கறிவேப்பிலை
1 -கைப்பிடி   எண்ணெய்.
ரம்பை இலை இரண்டு.
1 -கனிந்த தக்காளி. 
இவை தவிர வேறு தாளிப்புப்
பொருட்கள் சேர்க வேண்டாம்.
செய் முறை.

ஒட்டிப் பிடிக்காத பாத்திரமாக 
இருக்க வேணும் அதை அடுப்பில் வைத்து சூடானதும். எண்ணெய் ஊற்றவும் தாளிப்புக்குப் பாவிப்பதை விட அதிகமாக பொரிப்பதுக்கு பாவிப்பதை விடக் குறைவாக.

எண்ணெய் சூடானதும் முதலில் கோழியைத் தான் போட வேண்டும் கோழி எண்ணெயில் பாதி வெந்து வரும் போது பூண்டு விழுதைச் சேர்த்துக் கிளறி விட்டு மூட வேண்டும் அடுப்பு மெதுவாகவே இருக்கும் படி செய்யவும்.

ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை கோழியைத் திருப்பிப் போட வேணும்  பூண்டு விழுது போட்டு பத்து நிமிடம் கழித்து தக்காழி சிறிய வெங்காயம் இவைகளையும் அரைத்தே சேர்த்துக் கொள்ளவும்  அப்போதே உப்பும் சேர்க்க. மேலதிகம் தேவையானால்.

நன்றாக வறுவல் போல் வந்ததும் கறிவேப்பிலை ரம்பை போட்டு கிளறி விட்டு இறக்கவும் (நீர் பால் மிளகாய் )
விடவே கூடாது.

ஆர்.எஸ்.கலா

 


Post a Comment

0 Comments