Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க கப்பல் USS Gerald R. Ford மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறியமை, ஈரான் அழுத்தத்தின் விளைவா?


உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான USS Gerald R. Ford மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறியதற்கான முக்கிய காரணமாக சுமார் 4,500 கப்பல் பணியாளர்கள் சுமார் 309 நாட்கள் கப்பல் பயணம் காரணமாக  களைப்பு அடைந்துள்ளமை கொள்ளப்படுகின்றது.

வழக்கமான கப்பல் பயணங்கள் 200 நாட்கள் மட்டுமே நடைபெறுவதுண்டு.

அடுத்த முக்கிய காரணமாக, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் கொள்ளப்படுகின்றது. குறிப்பாக லொன்ரி அறையில் மார்ச் 2026ல் ஏற்பட்ட தீ  காரணமாக சிலர் காயமடைந்தனர்.

இப்போது கப்பல் கிரீஸில் உள்ள கிரேட் (Crete) பகுதிக்கு பராமரிப்புக்காகச் சென்றுள்ளது. அதன் பின்னர் கப்பல் இப்போது இன்னும் இரு வாரங்களில் தனது Norfolk, Virginia நோக்கிச்  செல்லவுள்ளது.

USS Abraham Lincoln மற்றும் USS George H.W. Bush உள்ளிட்ட இரண்டு பெரிய கப்பல்களும் இன்னும் மத்திய கிழக்குப் பகுதியிலேயே தரித்துள்ளன.

USS Gerald R. Ford கப்பலின் நகர்வு சாதாரண இராணுவ மாற்றம் அல்ல; இது ஒரு பெரிய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுவதாக சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றபோதிலும், சில பல தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில், ஹர்முஸ் நீரிணைப் பகுதியிலுள்ள இராணுவக் கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஈரான் எடுத்திருக்கலாம் என்று கூட நம்பப்படுகின்றது!

உலகில் மிகவும் முக்கியமான கடல் வழிகளில் ஒன்றான ஹர்முஸ் நீரிணை வழியாகவே சுமார் 20% எண்ணெய் கடந்து செல்கின்றது.

அதனால் இந்த பகுதியில் இராணுவ நடவடிக்கை இருப்பது நேரடியாக சர்வதேச பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியது.

இந்தப் பகுதியில் பதற்றத்தைக் குறைக்க வேண்டுமென்றால், பெரிய அளவிலான இராணுவ கப்பல்களைக் குறைப்பது ஒரு பொதுவான கருத்தாகும்.

ஆனாலும் இது நிரந்தரமாக விலகுவதல்ல; தேவையான போது மீண்டும் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி வரலாம். இந்தப் பகுதியில் இந்த நகர்வு காரணமாக அமெரிக்காவின் நேரடி இராணுவ அழுத்தம் குறைவது சில வகையில் ஈரானுக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குகின்றது என்று கூடக் கூறலாம்.
அதனால். இது நிரந்தர யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் ஒரு நகர்வாகக் கூட  இருக்கலாம் அல்லது பெரிய உலகளாவிய மாற்ற உத்தியின் ஒரு பகுதியாகக் கூட இருக்கலாம்; பொறுத்திருந்து பார்ப்போம்!

செம்மைத்துளியான்.

 


Post a Comment

0 Comments