
ஆசி வழங்கிய நொடியே அரசி காவலரை அழைத்து இங்கே உள்ள அனைத்து தாம்பூலங்களையும் வண்டியில் ஏற்றுங்கள் என்றார் ,ஆகட்டும் அரசே என்றவன் ஏற்றிட ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டான்.
அரண்மனை மருத்துவர் முகத்தில் சற்று கவலை தொற்றிக் கொண்டது பேத்தியை பிரிந்திடும் எண்ணம் ஆக்கிரமித்தல் செய்யவே அவை முகத்தில் வெளிப்பட்டனர்.
அப்போது தயக்கத் தோடு குமரன் அரசே நான் கொஞ்சம் பேசலாமா? என வினா தொடுத்தான் உடனே இளவரசி பேசலாமே மகாராணி குறை கூறிட மாட்டார் கூறுங்கள் என்ன? விடையம் என்றாள்.
அவன் மகாராணியைப் பார்க்க அவர் ஆம் கூறுங்கள் எனக் கட்டளை இட்டார் குமரன் ஆகட்டும் அரசே தவறாக நினைத்து விடாதீர்கள் என் ஆவா அதையே இங்கு சிறு வேண்டு கோளாகக் கூறிட விரும்புகிறேன் என்றவன் தொடர்ந்தான் .
இதோ என்னோடு பயணித்த ஏனைய மருத்துவ நண்பர்கள் யாவரும் நம் ராஜகுமாரிக்கு வைத்தியம் செய்திடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை .கிடைத்திருந்தால் அவர்களும் தங்களின் திறமையைக் காட்டி இருப்பார்கள் .யார் திறமையானவர் என்பது தங்களுக்கும்தெரிந்திருக்கும் அல்லவா?
என்றவன் தொடர்ந்து பேசினான் ஆகையால் அரசே தாங்கள் அரண்மனை வைத்தியராக இவர்களை பரீச்சித்து இவர்களில் ஒருத்தரை தேர்வு செய்து கொள்ளலாமே?
நான் தங்களின் கட்டளையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன் எனது தந்தையின் ஆசை கனவு இலட்சியம் எல்லாமே நான் எங்கள் கிராமத்திலே வைத்தியராகப் பணியாற்ற வேண்டும் என்பதே அதையே நானும் ஆசைப் படுகின்றேன் என்னை மன்னித்து விடுங்கள் இவர்களும் திறமை உள்ள வைத்தியர்களே தான் என்றான் குமரன்.
அமைதியாக அமர்ந்திருந்த மகாராணி குமரனைப் பார்த்து நீ சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன் அதாவது உன்னை அரண்மனை வைத்தியராக அமர்த்திடும் ஆசையையும் எண்ணத்தையும் கூறியது நம் அரண்மனை வைத்தியர்.
அவரின் ஆசைக்கு மதிப்பளித்தே நான் உன்னை நியமிக்க நினைத்தேன் இப்போது அவை மாறி விட்டது கண்டிப்பாக புதிய வைத்தியர் தேர்வு நடை பெறும் அப்போது அறிவிப்பு விடுப்போம் நீங்களும் வந்து கலந்து கொள்ளுங்கள் வெற்றி பெறுவோருக்கு அந்த வாய்ப்புகள் கிடைத்திடும் . இப்போது எல்லோரும் சென்று வாருங்கள் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என்றார் அரசி கூடவே ராஜகுமாரியும் கை கூப்பினார்.
(தொடரும்.)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments