
பயனிலசொல்லாமை!
குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
எல்லோரும் கேட்டு முகஞ்சுழிக்கப் பேசுவோரை எல்லோரும் தூற்றுவார் சொல்.
குறள் 192:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது.
பலர்முன் பயனற்ற சொல்பேசல், நட்பைக் கலைக்கின்ற தீமையினும் கீழ்.
குறள் 193:
நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
பயனற்ற சொல்லை விரித்துரைப்போன் நீதி தவறுவோன் என்றுணர்த்தும் சொல்.
குறள் 194:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.
பலரிடம் பண்பும் பயனுமற்ற சொல்லை விளம்புதல் நன்மைக்குத் தீது.
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.
பார்போற்றும் சான்றோர் பயனற்ற சொல்சொன்னால் வேரோடும் நன்மதிப்போ பாழ்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments