Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-19


இனியவை நாற்பது-37

இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது. 

விளக்கம்: 

இளமைப் பருவத்தை முதுமை என்று உணர்வது இனிது. 
உறவினர்களிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிது.
மென்மை உடைய மகளிரை,  நோயைப் போக்கும் மருந்து போன்றவர்கள், என்று உணர்வது இனிது.

இனியவை நாற்பது-38

சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்
சுற்றா உடையான் விருந்து. 

விளக்கம்:

இளம் வீரர்களைக் கொண்ட படை இனிது.
நல்ல சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. 
பசுவும் கன்றும் வைத்திருப்பவன் வழங்கும் விருந்து எல்லா வகையிலும் இனியது.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments