
Israel Yemen Conflict: இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஏமனும் அதிகாரப்பூர்வமாகக் களமிறங்கியுள்ளது. ஒரே நேரத்தில் ஈரான், ஏமன் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய மூன்று முனைகளில் இருந்தும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் உச்சகட்டமாக, செங்கடல் மற்றும் பாப்-எல்-மண்டேப் வழித்தடத்தில் இஸ்ரேலிய கப்பல்களுக்கு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையான முடக்கத்தை (Naval Blockade) அறிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு 3 பக்கமும் ஸ்கெட்ச்! களமிறங்கிய ஏமன்.. செங்கடல் மூடல்.. உலக நாடுகளுக்கு வார்னிங்
மத்திய கிழக்கில் (Middle East) போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் - ஈரான் இடையே நேரடியாக நீடித்து வந்த மோதல், தற்போது பிராந்திய அளவிலான பெரும் போராக உருவெடுத்து வருகிறது. இந்த மோதலில் தற்போது ஏமனின் ‘ஹூதி’ (Houthi) கிளர்ச்சியாளர்களும் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளதால், இஸ்ரேல் இப்போது மூன்று பக்கங்களிலிருந்தும் முற்றுகையிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் (Clash Report) தகவல்களின்படி, ஈரான் மற்றும் ஏமன் ஆகிய இரு நாடுகளும் இணைந்து இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
மூன்று பக்கங்களில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்
தற்போது இஸ்ரேல் பல முனை தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பும், ஈரானில் இருந்து அதன் படைகளும், இப்போது ஏமனில் இருந்து ஹூதி அமைப்பினரும் இஸ்ரேலை இலக்கு வைத்துள்ளனர்.
ஏவுகணை தாக்குதல்:
அண்மையில் ஏமனில் இருந்து ஏவப்பட்ட அதிநவீன ஏவுகணை ஒன்று இஸ்ரேல் வான் எல்லைக்குள் கண்டறியப்பட்டதை அடுத்து, இஸ்ரேலின் பல நகரங்களில் அபாய சைகை (Sirens) ஒலிக்கப்பட்டது. டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் ஹைஃபா (Haifa) ஆகிய முக்கிய நகரங்கள் இந்த தாக்குதல்களின் அதிர்வை உணர்ந்துள்ளன.
மேலும் படிக்க - மீண்டும் விமான விபத்தா? கிளம்பிய அடுத்த சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறிய விமானம்..!
என்ன பாதிப்பு?
இந்த தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், தற்காப்பு அமைப்புகள் மூலம் இவை முறியடிக்கப்பட்டதால், பெரிய அளவில் உயிரிழப்போ அல்லது உள்கட்டமைப்பு சேதங்களோ ஏற்படவில்லை என இஸ்ரேலிய மீட்புப் பணிகள் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹூதிகளின் எச்சரிக்கை:
ஆனால் ஏமனின் ஹூதி அமைப்பினர், "நாங்கள் திட்டமிட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியுள்ளோம், இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் தொடரும்" எனத் தெரிவித்துள்ளனர்.
செங்கடலில் முழுமையான கடற்படை முற்றுகை
இந்த போரின் மிக முக்கியமான திருப்பமாக, செங்கடல் (Red Sea) மற்றும் பாப்-எல்-மண்டேப் (Bab-el-Mandeb) கடல் பகுதியில் இஸ்ரேலிய கப்பல்களுக்கு ஏமனின் ஹூதி அமைப்பு முழுமையான தடையை விதித்துள்ளது.
பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் மரியோ நோஃபல் (Mario Nawfal) மற்றும் அல்ஜசீரா (Al Jazeera) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "ஏமன் தனது போர்த்திறனை வெறும் 'குறிவைக்கப்பட்ட தாக்குதல்கள்' (Targeted Strikes) என்ற நிலையிலிருந்து, செங்கடலில் இஸ்ரேலுக்கு எதிரான 'முழுமையான கடற்படை முற்றுகை' (Total Naval Blockade) என்ற நிலைக்கு மாற்றியுள்ளது."
இஸ்ரேலுக்குச் சொந்தமான அல்லது இஸ்ரேல் நோக்கிச் செல்லும் எந்தவொரு வணிகக் கப்பலும் இந்த வழியாகச் சென்றால், அது தங்களின் "சட்டபூர்வமான இராணுவ இலக்காக" (Legitimate Military Target) கருதப்பட்டு உடனடியாகத் தாக்கப்படும் என ஹூதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ (Yahya Saree) எச்சரித்துள்ளார். அமெரிக்கா எப்படி ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல்களுக்கு எதிராகத் தடையை விதித்துள்ளதோ, அதே போன்ற ஒரு முற்றுகையைச் செங்கடலில் இஸ்ரேலுக்கு எதிராக ஏமன் ஏற்படுத்தி உள்ளது.
தீவிரமடையும் மோதல்: 'எஸ்கலேஷனுக்கு எஸ்கலேஷன்'
காசா, லெபனான், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏமன் கூறுகிறது. "இஸ்ரேல் தனது தீவிரத்தன்மையைக் கூட்டினால் (Escalation), நாங்களும் எங்கள் தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிப்போம்" என ஹூதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மறுபுறம் இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகள் மீதும், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense Systems) மீதும் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் போன்ற உலகத் தலைவர்கள் இருதரப்பையும் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் போர்நிறுத்தத்திற்கு (Ceasefire) கொண்டு வர முயன்ற போதிலும், தற்போதைய சூழலில் அமைதிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
உலகப் பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்
செங்கடல் பகுதி என்பது உலகளாவிய வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய், எரிவாயு (Oil and Gas) போக்குவரத்திற்கான மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். தற்போது இந்த வழித்தடம் இஸ்ரேலிய கப்பல்களுக்கு மூடப்பட்டு, பதற்றம் அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது உலகளவில் புதிய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கலாம்.
ஈரான், லெபனான், காசா மற்றும் ஈராக் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும் வரை செங்கடல் முற்றுகையும், ஏவுகணைத் தாக்குதல்களும் தொடரும் என ஏமன் பிடிவாதமாக இருப்பதால், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழு அளவிலான உலகப் போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறதா என்ற கவலை சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments