Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது


புதிய அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் நாட்டில் உள்ள பல இலக்குகள் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

இதனால்  எண்ணெய் கப்பல்கள், வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில்,

கதம் அல்-அன்பியாவின் தலைமையகம், வட்டாரத்தில் நிலவும் பாதுகாப்பின்மையே இந்த முக்கிய கடல்வழியை மூடப்படுவதற்குக் காரணம்.

நீர்வழிப்பாதை வழியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடமாட்டமும் குறிவைக்கப்படும் என்று அது எச்சரித்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு,  ஈரானின் தெற்கு ஹோர்மோஸ்கான் மாநிலத்தில் உள்ள பகுதிகள் மீது சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

nambikkai


 


Post a Comment

0 Comments