Ticker

6/recent/ticker-posts

மனிதர்கள்-ரோபோக்கள் இணைந்து கூட்டு கலை நிகழ்ச்சி... சீனாவில் களைகட்டிய ரோபோக்கள் திருவிழா!


மேடையில் மனிதர்களும், ரோபோக்களும் இணைந்து வழங்கிய கூட்டு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

சீனாவின் தியான்ஜின் நகரில் கண்ணைக் கவரும் வகையில், ரோபோக்கள் திருவிழா களைகட்டியது.

தியான்ஜின் கலாச்சார மையத்தில், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அறிவுசார் ரோபோ திருவிழா நடைபெற்றது. இதில், அகிபாட், இன்ஜின் ஏஐ ஆகிய நிறுவனங்களின் ரோபோக்கள் மேடையில் பாடியும், நளினமாக நடனமாடியும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

மேடையில் மனிதர்களும், ரோபோக்களும் இணைந்து வழங்கிய கூட்டு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. சில ரோபோக்கள் தற்காப்புக் கலையை வெளிப்படுத்தியதோடு, நகைச்சுவை உரையாடல்களை நிகழ்த்தியும் அசத்தின.

இது மட்டுமின்றி, விழாவின் மற்றொரு முக்கியச் சிறப்பம்சமாக வானில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களைக் கொண்டு கண்கவர் ஒளிக்காட்சி நடைபெற்றது. இது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

news18


 


Post a Comment

0 Comments