Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கா - ஈரான் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது


அமெரிக்காவும் ஈரானும் அமைதி உடன்பாட்டை எட்டியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) அந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

லெபனான் உள்ளிட்ட எல்லா முனைகளிலும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்பும் சம்மதித்துள்ளன என்று அவர் கூறினார்.

ஈரானுடனான உடன்பாடு நிறைவடைந்துள்ளது; சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறினார்.

உடன்பாட்டில் என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; எவை விடுபட்டுள்ளன என்ற விவரம் இப்போதைக்குத் தெரியவில்லை.

அமெரிக்காவுடன் வரும் வெள்ளிக்கிழமை அமைதி உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று ஈரானியத் துணை வெளியுறவு அமைச்சர் கஸிம் கரிபாபாடி (Kazem Gharibabadi) தெரிவித்துள்ளார்.

ஈரானின் அரசாங்க ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அமைதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டுவிட்டது. சுவிட்சர்லந்தில் வரும் வெள்ளிக்கிழமை உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று அது சொன்னது.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் முற்றுகை இன்றிரவு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் திரு கஸிம் கூறினார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது போர் தொடுத்தன.

பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்.

எண்ணெய்ப் பரிவர்த்தனைக்கு உயிர்நாடியாய் விளங்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது.

அமெரிக்க - ஈரான் அமைதி உடன்பாடு உலகப் பொருளாதாரத்துக்குப் பெரும் ஊக்கமளிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

seithi


 


Post a Comment

0 Comments