Ticker

6/recent/ticker-posts

உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு இதுதான்! பாதிப்பு குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்


பொதுவாகவே உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்று தனித்தனியே தங்களின் தொழிலை சீராக செய்ய வேண்டியது அவசியம்.

அந்தவகையில், உடலில் அதிகப்படியான தொழிலை செய்யும் உறுப்புகளுள் கல்லீரல் முக்கிய இடம் வகிக்கின்றது. உடல் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்றான கல்லீரல் உடலில் 500 இற்கும் மேற்பட்ட தொழிலை செய்கின்றது.

உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு இதுதான்! பாதிப்பு குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள் | How Do Exercise And Diet Change Liver Disease

குறிப்பாக நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது. மேலும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கூட கல்லீரல் தான். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பாகும்.

இது உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கிக் கொடுக்கின்றது.எனவே தான் கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாக அறியப்படுகின்றது.

நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரலின் பங்கு இன்றியடையாதது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். 

கல்லீரலை பாதுக்காக்கு எளிய வழிகள்

பொதுவாகவே கல்லீரல் தன்னை தானே சரிசெய்துக்கொள்ளும் ஒரு உறுப்பு. அது தன்னால் இயன்ற வரை தன்னை புதுபித்தக்கொண்டு செயலாற்ற கூடிய ஒரு உறுப்பு என்பதால் இது 90 சதவீதத்துக்கு மேல் செயலிழந்த பின்னரே அறிகுறிகள்  தீவிரமாக வெளித்தெரிய ஆரம்பிக்கும். 

கல்லீரல் பாதிப்படைந்துவிட்டால், உடலில் பெரும்பாலான பாகங்களின் தொழில்பாடு தடைப்பட்டு இறுதியில் உயிரையே இழக்க வேண்டிய அபாயம் இருப்பதால் கல்லீரலின் ஆரோக்கியத்தில் ஒருபோதும் அலட்சியம் கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

மன அழுத்தத்தில் இருப்பது உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து கல்லீரல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். எனவே, தியானம், சுவாசப் பயிற்சிகள் மற்றும் யோகா போன்றவறில் ஈடுபடுட்டு மன அழுத்தத்தை நிர்வகிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க துணைப்புரியும்.

உணவு முறையிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவை உட்கொள்வது கல்லீரலுக்கு நல்லது.குறிப்பாக கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க  பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக சீனி கலந்த பானங்களையும், துரித உணவுகளையும் தவிர்ப்பது முக்கியம்.

அதிகப்படியான ஆல்கஹால் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும் எனவே ஆல்கஹால் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. மேலும் அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் வலுவாக பாதிக்கும். இது குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும். 

கல்லீரல் பாதிப்பில், உடல் பருமன் ஒரு முக்கிய காரணமாகும். எனவே முறையான உடல் பயிற்சிகள் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது போன்ற வாழ்க்கை முறை பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் உடலில் அதிகபடியான வேலைகளை செய்யும் கல்லீரலின் ஆரோக்கியம் சீராக இருக்கும்

manithan



 


Post a Comment

0 Comments