Ticker

6/recent/ticker-posts

ஒருவர் தந்தையாக மாறுவது குழந்தைகள், தாய்மார்களுக்கு மட்டுமல்ல...


அது ஆண்களுக்கும் பல நன்மைகளைத் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி தந்தையாக இருப்பது ஆண்களின் மூளை ஆரோக்கியம், மனநலம், உடல்நலம், சமூக உறவுகள் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.

இன்றைய தந்தையர், முந்தைய தலைமுறையினரைவிட குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

குறிப்பாக உயர்கல்வி பெற்ற தந்தையர் குழந்தைப் பராமரிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவதாகத் தரவுகள் காட்டுகின்றன.

குழந்தைகளை வளர்ப்பது பொறுமை, பேச்சுவார்த்தை திறன், இரக்கம் போன்ற பண்புகளை வளர்க்கிறது.

குடும்பம், சமூகத்துடனான உறவையும் வலுப்படுத்துகிறது.

குழந்தைகள் உள்ள பெற்றோரின் மூளை வயது, குழந்தை இல்லாதவர்களைவிட இளமையாக இருப்பது பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக தந்தையருக்கு நினைவாற்றல், சிந்தனைத் திறனில் கூடுதல் நன்மைகள் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளையில் புதிய தந்தையர் தூக்கமின்மை, உடல் எடை அதிகரிப்பு, மனஅழுத்தம், பதற்றம் போன்ற சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும்.

எனினும் நீண்ட காலத்தில் தந்தையாக இருப்பது வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம், திருப்தியை வழங்குவதோடு ஆண்களின் மனம், மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

seithi


 


Post a Comment

0 Comments