Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை தாக்குதல்.


தெற்கு லெபனான் மீதான தனது தொடர் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் அல்லது மேலும் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என தெஹ்ரான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை சரமாரியாக வீசியுள்ளது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் (ஜிஎம்டி 19:00) இஸ்ரேலைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல கட்டத் தாக்குதல்களால், நாடு முழுவதும் உள்ள இடங்களில் எச்சரிக்கை ஒலிகள் ஒலித்தன என்று இஸ்ரேலிய இராணுவம்  மூலம் தெரிவித்துள்ளது.

"இன்றிரவு நடந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாகும். இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் மீண்டும் நடந்தால், பதிலடி நடவடிக்கைகள் இன்னும் விரிவானதாகவும், பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க-சியோனிச இலக்குகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும்," என்று ஐ.ஆர்.ஜி.சி அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில் டிரம்ப் கூறுகையில், “ஈரானுடன் இறுதி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு நாங்கள் மிக அருகில் இருக்கிறோம். அது ஒரு நல்ல ஒப்பந்தமாக அமையும். தற்போது நடக்கும் நிகழ்வுகளால் அது முறிந்துபோவதை நான் விரும்பவில்லை.”என்று தெரிவித்துள்ளார்.

சமாதான ஒப்பந்தம் கடைசிக் கட்டத்தை நெருங்கும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்வது நல்லது என்றும் அமேரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 


Post a Comment

0 Comments