Ticker

6/recent/ticker-posts

அமைதிப் பேச்சு வார்த்தையில் இருந்து பாதியில் வெளியேறிய ஈரான் குழு? என்ன நடந்தது..


“லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும்” - அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து ஈரான் குழு பாதியில் வெளியேறியதாகத் தகவல் வெளியான நிலையில், 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்காவும், ஈரானும் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்தியஸ்த நாடுகள் அறிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர 14 அம்ச ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. இதனை அமல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் நகரில் நேற்று நடைபெற்றது.

பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், லெபனானில் ஈரானால் பணம் கொடுத்து இயக்கப்படும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானியப் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற அரங்கில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அமெரிக்கா, ஈரான் இடையே உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இடையூறின்றி சுமூகமாக நடைபெற்றதாகவும், 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாகவும் கத்தார் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments