
சேவை தொடர்பான தேவைக்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சட்டத்தரணி ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகத் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அப்போது பதில் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் செயற்பாடு அடிப்படை உரிமை மீறலாகும் எனத் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு வெலிமடை பொலிஸ் நிலையத்தில், சட்டத்தரணி ஆர்.எம். சஜித் பண்டாரவிடம் அவமரியாதையாக நடந்து கொண்டு, “எனக்கு வேண்டுமானால் உடும்பை முதலை என்றும், முதலையை உடும்பு என்றும் மாற்றிக் காட்ட முடியும்” என்ற பொருளில் மிரட்டலான கருத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டத்தின் முன் சமமான நடத்தையை மறுத்ததன் மூலம் அரசியலமைப்பின் 12(1)ஆம் பிரிவின் கீழ் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்தது.
மேலும், பொதுமக்களின் உரிமைகளை மீற எந்தப் பொலிஸ் அதிகாரிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், பொலிஸ் அதிகாரிகள் அனைவரிடமும் மரியாதையுடனும் தொழில்முறை அணுகுமுறையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments