
ஒப்புரவறிதல்
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு.
மழைக்கென்ன கைம்மா றளிப்பார்? மழைபோல் உதவுவோரும் நாடமாட்டார் இங்கு.
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
வாழ்க்கையில் சேர்க்கின்ற செல்வங்கள் எல்லாமே ஏழைக்குத் தந்துதவத் தான்.
குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.
எந்த உலகிலும் உற்றாரைக் காப்பாற்றும் ஒப்புரவுப் பண்போ அரிது.
குறள் 214:
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
மற்றவர்க்கு அன்பாய் உதவுபவன் வாழ்பவன்! செத்தார்போல் மற்றவர் சொல்.
குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு
ஊருக் குதவுகின்ற ஊருணிபோல் பேரறி வாளனிடம் உள்ளசெல்வம் இங்கு
(தொடரும்)
மதுரை பாபாராஜ்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments