Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது!-2


இன்னா நாற்பது -1

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,மந்திரம் வாயா விடின்.

விளக்கம்:

உறவுகள் இல்லாத மனைவியின் அழகு துன்பமாகும். 
தந்தையை இழந்துவிட்ட மகனின் அழகு துன்பமாகும். 
துறவோர் வீடுகளில் உணவு அருந்துதல் துன்பமாகும். 
மந்திரங்கள் பயன் தராவிட்டால் துன்பமாகும். 

இன்னா நாற்பது -2

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு.

விளக்கம்: 

சைவ உணவு அருந்துபவர் வீட்டில் நாயும், கோழியும் இருப்பது துன்பமாகும். 
மனைவியும் கணவனும் அனுசரித்துப் போகாமல் இருப்பது துன்பமாகும். 
சிறப்பு இயல்புகள் இல்லாத புடைவையை உடுத்துவது துன்பமாகும். 
மக்களைக் காப்பாற்ற நல்ல அரசன் இல்லாத நாடு துன்பமாகும். 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments