
சீன நாட்டவருக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சரொருவரின் மகன் கொழும்பு - கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடையவர் ஆவர். இவரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி லூசன் சூரியபண்டாரவின் பணிப்புரையின் பேரில், கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சிலோகம தலைமையிலான அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments