குறள் மொழி 86
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.
குறள் எண் : 127
குறள் மொழியின் பொருள் :
ஒருவர் எதைக் காக்காவிட்டாலும் தன்னுடைய நாவைக் காத்தல் வேண்டும். தவறுதலாக தவறான, பொய்யான சொற்களைச் சொல்லிவிட்டால் கூட அதனால் துன்பம் ஏற்படும்.
நபிமொழி:
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுவதற்காக, "இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யைக் கூறாதீர்கள்! இறைவன் மீது பொய்யைக் கூறுவோர் வெற்றிபெற மாட்டார்கள்.
இறைவசனம்: (திருக் குர்ஆன் - 16:116)
அறன்வலியுறுத்தல்
குறள் மொழி 87
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
குறள் எண் : 40
குறள் மொழியின் பொருள் :
ஒருவன் மேன்மேலும் செய்ய வேண்டியது நன்மை தரும் அறச்செயல்கள் ஆகும். அதுபோல ஒருவன் செய்யாமல் தவிர்க்க வேண்டியது பழிச்செயல்களாகும்.
நபிமொழி
"இன்னும், இன்னும் எப்போதும் நன்மையே செய்யுங்கள். நிச்சயமாக நன்மை செய்வோரை (அல்லாஹ்) இறைவன் மிகவும் நேசிக்கின்றான்.
ஆதாரம் : திருக்குர்ஆன் இறைவசனம் 2: 195.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments