
“மௌனத்தில் மலர்ந்த காதல்"மாலை மழை பெய்து நின்ற நேரம்…கல்லூரி வளாகம் முழுக்க ஈர வாசம் பரவியிருந்தது.
மரத்தடியில் தனியாக அமர்ந்திருந்தாள் அவள்.
கையில் பழைய குறிப்பேடு,அதிலே அவள் உலகம் முழுக்க மறைத்து வைத்த கவிதைகள்.
அவன் தூரத்தில் நின்றபடியே அவளைப் பார்த்தான்.
இன்று அவளின் மௌனம் அவனுக்குப் புதிதாய் தோன்றியது.
“பேச முடியாத பெண்…” என்று இதுவரை பார்த்தவன்,
இன்று
“பேசாமல் இவ்வளவு உணர்வை சுமக்கிறாளா?”
என்று மனதிற்குள் உடைந்தான்.
திடீரென்று காற்று வீசியது.
அவள் குறிப்பேட்டிலிருந்து ஒரு தாள் பறந்து அவன் காலில் வந்து விழுந்தது.
அவன் அதை எடுத்தான்.அதில் எழுதப்பட்டிருந்தது,
“சத்தமில்லா என் உலகத்தில் யாராவது என் கண்களை வாசித்தால் போதும்…”
அந்த ஒரு வரி…
அவன் இதயத்துக்குள் ஏதோ விதைத்தது.முதல் முறையாக அவளைப் பார்த்தபோது வந்த இரக்கம்.
இப்போது மெதுவாக காதலாக மாறிக்கொண்டிருந்தது…
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments