Ticker

6/recent/ticker-posts

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலி


உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து நேற்று முன்தினம்   இரவு முதல் நேற்று (06) வரை தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது. இதில் 7 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர் என கீவ் நகர இராணுவ நிர்வாகத்தின் தலைவர் திமுர் டெலிகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், போடில்ஸ்கி மாவட்டத்தில் ஒரு குடியிருப்பு கட்டடம் பகுதியளவு இடிந்து விழுந்தது. டார்னிட்சியா மாவட்டத்தில் பல அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தன, இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவை குடியிருப்பு கட்டடங்கள், மக்கள் உறங்கிய மற்றும் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்த இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று திங்கள் கிழமை அதிகாலையிலும் தொடர்ந்த இந்தத் தாக்குதலில், பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மெட்ரோ நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்த நிலையில், நகரம் முழுவதும் குண்டுவெடிப்புச் சப்தங்கள் கேட்டன என தெரிவிக்கப்படுகிறது. 

tamilmirror

 


Post a Comment

0 Comments