Ticker

6/recent/ticker-posts

"பிறப்புரிமைக் குடியுரிமை தொடரும்" - அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு


அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) முயற்சியை நிராகரித்திருக்கிறது.

6-3 என்று நீதிபதிகள் முயற்சிக்கு எதிராக வாக்களித்தனர்.

திரு டிரம்ப்பின் உத்தரவு அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாக அவர்கள் கூறினர்.

சட்டத்தின்படி அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும்.

தாய், தந்தை இருவரும் அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இல்லை என்றால் நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமையை அங்கீகரிக்கவேண்டாம் என்று திரு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

அதை கீழ்நிலை நீதிமன்றங்கள் ஏற்கனவே நிராகரித்திருந்தன.

சென்ற ஆண்டு (2025) திரு டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற முதல் நாளில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அந்த நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார்.

seithi


 


Post a Comment

0 Comments