
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொல்லப்பட வேண்டும் என ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் முழக்கம் எழுப்பப்பட்டது.
ஈரானின் உச்ச தலைவராக இருந்து கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி அந்நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஏராளமானோர் திரண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அப்போது, அமெரிக்காவும் இஸ்ரேலும், டொனால்ட் டிரம்பும் அழிக்கப்பட வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் நினைத்திருந்தால் கமேனியின் இறுதி மரியாதையின்போது, அங்கே குழுமியிருந்த ஈரான் தலைவர்கள் அனைவரையும் ஒரே குண்டால் தாக்கி அழித்திருக்க முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா அழித்துவிட்டால் அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்த ஆளே இல்லாமல் போய்விடும் என்பதாலேயே அப்படிச் செய்யவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேபோல கமேனிக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கூடியது தனக்கு மிகவும் அதிர்ச்சியான ஒரு விஷயமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மக்கள், கமேனியை வெறுப்பார்கள் என்றே தான் கருதியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments