
சீன கடல் பரப்பில் அந்நாட்டு கடலோர காவல் படையினருடன் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மோதலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் மற்றும் கடல் எல்லைகள் மீது சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் ரென்ஐி ஜியாவோவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில், சீனக் கடலோரக் காவல்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பிலிப்பைன்ஸ் கப்பலை உடனடியாக தங்கள் நாட்டு கடல் எல்லையை விட்டு வெளியேறும்படி சீன படையினர் எச்சரித்து உள்ளனர்.
ஆனால், அதனைப் புறக்கணித்துவிட்டு இரண்டு ரப்பர் படகுகளில் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் சீன ரோந்து கப்பலை அபாயகரமான முறையில் நெருங்கி, அதைச் சுற்றி வளைத்து மோதலில் ஈடுபட்டனர். பிலிப்பைன்ஸ் கடற்படையினர் துடுப்புகள் மற்றும் நீண்ட கம்புகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி சீனப் படையினரை தாக்க முயன்றதால் அசாதாரண சூழல் நிலவியது
இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் எல்லையில் சீனா ஆபத்தான மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்கா கண்டித்துள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments