Ticker

6/recent/ticker-posts

சலேவின் மனு – சட்டமா அதிபரின் எதிர்ப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது…


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற மனு  (14) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஐந்தாவது நாளாகவும் நீண்ட நேரம் வாதங்களை முன்வைத்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், அதே விடயங்களை மீண்டும் மீண்டும் வேறுபட்ட சொற்களில் நீதிமன்றத்தில் முன்வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த மனுவில் இடைக்கால மனுதாரர்களாக எட்டு பேர் கருத்து முன்வைக்க முன்வந்துள்ளனர். அரசின் சட்டமா அதிபர் சார்பிலும் பதிலளிப்பாளர்கள் சார்பிலும் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், அந்த இடைக்கால மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்த எதிர்ப்பை பதிவுசெய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனு மீதான விசாரணையை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது

lankatruth


 


Post a Comment

0 Comments