
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படுவதற்கு அது வழியமைக்கும் என்றார் அவர்.
அமெரிக்காவுடன் கையெழுத்தாகவிருக்கும் இணக்கக் குறிப்பின் இறுதி வடிவத்தை ஈரான் வெளியிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அமைதி உடன்பாடு கூடிய விரைவில் செய்துகொள்ளப்படும் என்று இருதரப்பும் கோடிகாட்டியுள்ளன.
பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
ஈரான் அணுவாயுதம் பெறும் எண்ணத்தைக் கைவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உடன்பாடு 24 மணி நேரத்துக்குள் உறுதிசெய்யப்படக்கூடும் என்று பாகிஸ்தானும் தெரிவித்தது.
அமைதி உடன்பாடு முன்னெப்போதைக் காட்டிலும் நெருங்கி வந்துவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் X (Shehbaz Sharif) தளத்தில் பதிவிட்டார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments