Ticker

6/recent/ticker-posts

டென்னிஸுக்கும் ஸ்ட்ராபெர்ரிக்கும் என்ன தொடர்பு?


ஸ்ட்ராபெர்ரி இல்லாத விம்பிள்டன் (Wimbledon) பொதுவிருதுப் போட்டியே இல்லை.

போட்டியில் காலங்காலமாக ஸ்ட்ராபெர்ரியுடன் கிரீம் பரிமாறப்படுகிறது..

அதை ரசிகர்களும் விளையாட்டாளர்களும் ருசித்துச் சாப்பிடுகின்றனர்.

தற்போது லண்டனின் விம்பிள்டன் பகுதியில் நடக்கும் போட்டியிலும்  ஸ்ட்ராபெர்ரி மீதான மோகம் தொடர்கிறது.

இரண்டு வாரப் போட்டியில்
2.5 மில்லியன் ஸ்ட்ராபெர்ரிகளும் 17,363 லிட்டர் கிரீமும் சாப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ட்ராபெர்ரியுடன் கிரீம்  2.85 பவுண்ட் (சுமார் 5 வெள்ளி) என்று விலைபோகிறது.

ஏன் இந்த வழக்கம்?

1877இல் நடந்த முதல் போட்டியிலிருந்தே அந்த வழக்கம் உள்ளது.

All England Lawn Tennis & Croquet Club சங்கம் ஜூன் மாத இறுதியில் போட்டியை ஏற்று நடத்தத் திட்டமிட்டிருந்தது. 

ஸ்ட்ராபெர்ரி அறுவடை செய்யப்படும் காலக்கட்டம் அது.

அரிய பழங்களாகக் கருதப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகளை ரசிகர்களிடம் விற்க யோசனை பிறந்தது.

அது பின்னர் வழக்கமான ஒன்றாக மாறியது

seithi


 


Post a Comment

0 Comments