Ticker

6/recent/ticker-posts

குழந்தைகளுக்கு பூச்சி மருந்து..எத்தனை முறை கொடுக்கலாம்? எவ்வளவு கொடுக்கலாம்?


குழந்தைகளுக்கு பொதுவாக, பெற்றோர்கள் குடற்புழு பூச்சி மருந்து கொடுப்பது இயல்பு. இதனை, மருட்த்துவரின் ஆலோசனைப்படி, எத்தனை காலத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம், எவ்வளவு கொடுக்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

இந்தியாவில், பெரும்பாலான குழந்தைகள் குடற்புழு பிரச்சனையால் பாதிக்கப்படுவர். இது, சிறார் மத்தியில் ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவது, மண்ணில் கைவைப்பது, கைகளை சுத்தமாக கழுவாமல் உணவு உண்பது உள்ளிட்ட விஷயங்களால் குடற்புழுக்கள் உருவாகலாம். பல்வேறு சமயங்களில், பெற்றோருக்கு இப்படி ஒரு பிரச்சனை தன் குழந்தைக்கு இருப்பது தெரியவே தெரியாது. இதன் ஆரம்பகால அறிகுறிகள், ஒரு சாதாரண வயிற்று பிரச்சனையாகவே இருக்கும். அதன் பின் தான் இதன் வீரியம் என்ன என்பது தெரியும். 

மருத்துவர் சொல்வது..

பொதுவாக, குழந்தைகளுக்கு ஒரு வயது ஆன பின்பு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பெற்றோர் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்தை கொடுக்கலாம் என பரிந்துரைக்கின்றனர். இது, ஒன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமாம். இருப்பினும், ஒவ்வொரு குழந்தையின் உடல்நிலையும், எடையும் வயதும் வெவ்வேறு என்பதால், அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்தின் அளவு மாறுபடலாம். எனவே, குடற்புழு மருந்தை கொடுக்கும் முன்பு, மருத்துவர்களின் ஆலோசனைப்படியே வழங்க வேண்டும். 

அறிகுறிகள்:

குடற்புழுவால் பாதிக்கப்படும் குழந்தைகள், அடிக்கடி வயிற்று வலி, பசியின்மை, மந்தமான நிலை, அடிக்கடி சோர்வு ஏற்படுதல், இரவில் பற்களை கடித்தல், ஆசனவாயைச்சுற்றி அரிப்பு அல்லது எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள், குடற்புழுவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இருக்கலாம். இந்த பிரச்சனையை உடனடியாக கவனிக்காவிடில், இது குழந்தையின் வளர்ச்சியையும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் பாதிக்கக்கூடும்.

சுகாதாரம்:

பொதுவாக, குழந்தைகளுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், பெற்றோருக்கு அதை எப்படி தடுப்பது, அதற்கான மருந்து என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என தோன்றும். இந்த விஷயத்திலும் பல பேர் அப்படித்தான் இருப்போம். ஆனால், இதை தடுப்பது அடிப்படை சுகாதாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. குழந்தைகள் எது சாப்பிடும் முன்பும், கைகளை நன்றாக கழுவிவிட்டு பின்பு சாப்பிட வேண்டும். நகங்களை அடிக்கடி வெட்டுவது, அழுக்கு சேராமல் தடுப்பது, சுத்தமான குடிநீரை குடிப்பது, கடைப்பொருட்களை வாங்கி கொடுக்கமல் இருப்பது உள்ளிட்டவை அடிப்படை ஆகும். 

சுயமாக மருந்து வாங்கி கொடுப்பது:

பெற்றோர்கள் பல பேர், மருந்து கிடைகளில் எந்த மருந்து கிடைக்கிறதோ அதனை தன் குழந்தைக்கு வாங்கி ஊற்றி விடுவர். ஆனால், இது சரியானது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், குடல் புழுக்கள் இருப்பதாக அறிகுறிகள் தோன்றினால், அதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பது நல்லது. 

குடற்புழுக்களின் வகைகள் என்னென்ன?

நூல் புழுக்கள்: இவை மிகவும் பொதுவானவை, மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் இரவில் கடுமையான அரிப்பை ஏற்படுத்தும். இதனால், குழந்தைகள் தூக்கமின்றி அவதிப்படுவர்.

உருளைப்புழுக்கள்:

இந்த புழுக்கள் உடலில் தங்கி, குழந்தை சாப்பிடும் உணவின் ஊட்டச்சத்துகளை உறிஞ்சிவிடும். இதனால், பலவீனமும் ஏற்படலாம்.

கொக்கிப்புழுக்கள்: 

இவை, குடல் சுவரில் ஒட்டிக்கொள்வதோடு ரத்தத்தையும் உறிஞ்சும். இதனால், குழந்தைகளுக்கு கடும் ரத்த சோகை ஏற்படலாம்.

சோதனை செய்வது எப்படி?

குடல் புழுக்கள் இருப்பது அறிகுறிகள் தெரியாத வகையில், மருத்துவர்கள் மலப்பரிசோதனை, டேப் பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்வர். குழந்தையின் மலத்தை ஆய்வு செய்வதன் மூலம் புழு அல்லது அவற்றின் முட்டைகள் இருப்பதை கண்டுபிடிக்கலாம். அதே போல, டேப் பரிசோதனையில், ஆசனவாய் பகுதியில் ஒரு செலோடேப் வைத்து எடுத்து பிரித்து அதை பரிசோதிப்பார்கள். 

zeenews


 


Post a Comment

0 Comments