
‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்ட அனுருத்த பண்டாரவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் (23) தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு போராட்டக் காலத்தில் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதன் மூலம், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய தேஷபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட புலனாய்வுப் பிரிவின் அன்றைய நிலையப் பொறுப்பதிகாரி நலின் ஸ்ரீயந்த ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்தே உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த மனு அனுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments