
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் (21) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு முன்னிலையாவதைத் தவிர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்து, அவர்களை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில விராஜ் காரியவசமின் தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் ‘ஊழல்’ குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.
இன்று பிற்பகல் வரை அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை என்றும், அவர் முன்னிலையாகாமைக்கான எவ்வித காரணமும் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்களை தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்துவது இலஞ்சச் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ என்ற கடுமையான குற்றத்தின் கீழ் வகைப்படுத்தப்படும் விடயமாகும்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments