Ticker

6/recent/ticker-posts

கரூர் துயரம் : “இன்னும் திருத்தல...” - இறப்பில் இன்றளவும் மலிவு அரசியல் செய்யும் விஜய்!


கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் தற்போதைய முதல்வர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அப்போதைய திமுக அரசு வழங்கியது.

அதோடு இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த கூட்ட நெரிசலுக்கு விஜய் கட்சியினர் பலரும் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பிய நிலையில், அதற்கும் வீடியோ ஆதாரத்துடன் இதற்கு காரணம் விஜய் ரசிகர்கள் என்று அரசு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வராமல், நேரத்தை இழுத்தடித்ததும், அவரது முகத்தை காட்டாமல் ரோட் ஷோ மேற்கொண்டதும் இந்த கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள், அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த பெருந்துயரத்தை அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். எனினும் திமுக மீது தவெக-வினர் influencer-களை பயன்படுத்தி வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பினர்.

தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியிருந்த நேரத்தில், தன்னை சந்திக்க வந்த ரசிகர்கள் கூட ஆறுதலாக இருக்காமல், உடனே புறமுதுகிட்டு சென்னை வந்தடைந்தார். அதோடு இந்த நிகழ்வு குறித்து ஒரு வருத்தமோ, ஆறுதலோ தெரிவிக்காமல், சம்பவம் குறித்து 3-வது நாள் வீடியோ வெளியிட்டார். அதுவும் அதில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல், திமுக மீது பழியை போட்டு, திசைத்திருப்பி, மக்களை ஏமாற்றி, ரசிகர்களை தூண்டிவிட்டார் விஜய்.

இப்படியான சூழலில் இந்த கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேற்று வரை நேரில் சந்திக்காத விஜய், தற்போது இடைத்தேர்தல் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக இன்று (ஜூன் 10) கரூர் சென்றுள்ளார். அங்கே சென்ற அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி ஆணைகளை வழங்கவுள்ளார்.

எனினும் 'உங்கள் விஜய்... உங்கள் வீட்டு பிள்ளை.." என்று சினிமா டயலாக்கை மக்கள் மத்தியில் அவிழ்த்துவிடும் விஜய், அவர்கள் இறப்பில் கேவலமான அரசியல் செய்து வருவது பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 285 நாள் மௌனம் காத்த விஜய், தற்போது விரைவில் கரூரில் இடைத்தேர்தல் வருவதால் தனது கரூருக்கு சென்றுள்ளார் விஜய். எனினும் தன்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்காமல், அங்கே சென்றும், கடந்த ஆட்சி குறித்தும், காவல்துறை குறித்தும் குறை கூறி அசிங்கமான அரசியல் செய்து வரும் விஜய்க்கு, சமூக வலைதள பக்கத்தில் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

kalaignarseithigal

 


Post a Comment

0 Comments