Ticker

6/recent/ticker-posts

இறந்தவர் போல் நடித்து அதிகாரிகளை ஏமாற்றினார்


மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கிலிருந்து தப்பிக்க இறந்ததுபோல் நாடகமாடிய ஆடவர் வசமாகச் சிக்கியுள்ளார்.

சம்பவம் சீனாவில் நடந்தது.

கடந்த ஆண்டு ஜனவரியில் 'சி' என்ற குடும்பப்பெயர் கொண்ட அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகக் கைதானார்.

பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சிறைத்தண்டனைக்குப் பயந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறந்ததுபோல நாடகமாடத் திட்டமிட்டார்.

அதிக மருந்தை உட்கொண்டதால் இறந்துவிட்டதுபோல நாடகமாடிய அவருக்குக் குடும்பத்தினர் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு சவப்பெட்டியை வாங்கி வேக வேகமாக அவரை அடக்கம் செய்வதுபோல குடும்பமே சேர்ந்து நடித்தது.

அந்த நேரத்தில் அவர் வேறு மாநிலத்திற்குத் தப்பினார்.

எனினும் 'சி'யின் உடலைப் பார்க்க முடியாததால் காவல்துறைக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணை தொடங்கியது.

அவரது வங்கிப் பரிவர்த்தனைகள், தொலைபேசிப் பதிவுகள் அவர் உயிருடன் இருப்பதைக் காட்டிக்கொடுத்தன.

அவர் மீண்டும் கைதானார்.

5 மாதங்கள் சிறைத்தண்டனையும், 20,000 யுவான் (சுமார் 3,800 வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டது.

அவருக்குத் துணைபோன சந்தேகத்தின் பேரில், அவரது தாய், பாட்டி ஆகியோர் மீது குற்ற விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் 10 மில்லியன் பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

seithi


 


Post a Comment

0 Comments